Friday, February 04, 2005

எனது சில ஜோக்குகள் - 2

மேலும் சில ஜோக்குகள்...

"டாக்டர் நீங்க ஏன் அந்த நர்ஸ்கிட்ட மட்டும் அதை எடுத்துட்டு வா இதை எடுத்துட்டு வான்னு ரொம்ப வேலை வாங்கிட்டே இருக்கீங்க..?"

"போனவாரம் இன்னொரு நர்ஸ்கிட்ட கொஞ்சிப் பேசிட்டு இருந்ததை, வீட்ல என் பொண்டாட்டிகிட்ட போட்டு குடுத்துட்டா. அதனாலதான்...!"

*******************************************************

"டாக்டர் எனக்கு வலிக்காம ஊசி போடுங்க டாக்டர்"

"அப்படின்னா இந்தா இந்த மருந்தை நீ வாயிலயே குடிச்சிரு..!"

"ஐயோ..! அதுக்கு ஊசியே போட்ருங்க டாக்டர்..!"

********************************************************

"டாக்டர் எப்படியோ என் உயிர காப்பாத்திட்டீங்க. உங்களுக்கு என்ன கைமாறு பண்றதுன்னே தெரியலை"

"நீங்க வாங்கின கடன மட்டும் குடுத்திடுங்க. உங்களை காப்பாத்தினதே அதுக்குதான்...!"

********************************************************

"லாலு பிரசாத் யாதவ் மட்டும் சுகாதரத்துறை அமைச்சராயிருந்தா உடனே ஒரு சட்டம் கொண்டு வருவார்."

"என்ன சட்டம்..?"

"டாக்டருங்க எல்லாம் ஸ்டெதாஸ்கோப்புக்கு பதிலா மூங்கில் குச்சியைதான் பயன்படுத்துனும்னு..."

***********************************************************

"அந்த டாக்டர் நிஜமாவே வசூல்ராஜா எம்பிபிஎஸ்தான்"

"எப்படி சொல்றே..?"

"பேஷண்டுங்க சரியா வராததுனால, கிளினிக்ல கந்துவட்டி விட்டுட்டு இருக்காரு."