Saturday, February 12, 2005

கணினி அகராதியில் சில பக்கங்கள் - 1

காசிலிங்கம் மற்றும் செல்வராஜ் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று 'கணினி மகா அகராதி'யின் சில பக்கங்களை உள்ளிட முடிவு செய்துள்ளேன்.

இந்த அகராதியின் சில பக்கங்களை உள்ளிடுவதற்கு முன்னால், இந்த அகராதியைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். இந்த அகராதி, மற்ற கணினி அகராதியைப் போல் ஒரு சொல்லிற்குரிய அதன் தமிழ் பொருளை மட்டும் கூறாமல், அதன் தொழில்நுட்பத்தை முடிந்த வரையில் விளக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு சொல்லின் நேரடியான தமிழ்சொல்லை பெரும்பாலும் இதில் காண முடியாது. குறிப்பிட்ட கணினி சொல்லின் தொழில்நுட்பத்தை இயன்றவரை விளக்குவதே இந்த அகராதி.

இந்த அகராதியில் ஒரு சொல்லின் விளக்கத்தை மூன்று நிலைகளாக அமைத்துள்ளேன். முதலில் ஒரு குறிப்பிட்ட சொல், அந்த சொல் கணினியில் எந்தப் பிரிவைச் சார்ந்தது, இறுதியாக அந்த சொல்லின் தொழில்நுட்ப விளக்கம். இந்த அகராதியின் பிற்சேர்க்கையில் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. நெட்வொர்க்கிங்கில் குறிப்பிடப்படும் நாடுகளின் சுருக்கப் பெயர்கள், கணினி துறையில் கையாளப்படும் சுருக்கச் சொற்களுக்கான விரிவாக்கம் மற்றும் கோப்புகளின் வகைகளைக் கண்டறிய பயன்படும் கோப்பு வகை பெயர் (File Name Extention) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அகராதி 1524 பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது.

மன்னியுங்கள். அடுத்த இடுகையில் கண்டிப்பாக அகராதியின் பக்கங்கள்...